நோக்கம்:
நியூகாசில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாழும் தமிழ் ஆர்வம் உள்ள குழந்தைகள் தமிழ்த்திறன் பெற்று, தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொடுப்பதாகும். தமிழ்ச் சார்ந்த கலைகள், கலாச்சாரம், இலக்கியம் பற்றிய அறிவினை இன, மொழி, சமய வேறுபாடின்றி அனைத்து சமூகத்திடமும் வளர்ப்பதும் நம் கல்விக்கழகத்தின் நோக்கமாகும்.குறிக்கோள்:
- குழந்தைகள், தமிழ்மொழியை கற்பதற்கு உதவுவது.
- தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அறிவை எளிய முறையில் கற்றுத் தருவது.
- தமிழ் கற்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வின் சமூகத்திறனை மேம்படுத்துவது.