முகப்பு

[layerslider id=”1″]
 

நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம்

வணக்கம், நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் இணையத்திற்கு வருக!

யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பதனை வெளிநாட்டுச் சூழலில் வளரும் நம் குழந்தைகளும் அறிந்து, மகிழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில், நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் அமைத்து குழந்தைகளுக்கு தமிழ்க் கற்று கொடுத்துவருகிறோம். தமிழ் மொழி மட்டுமன்றி, கலை, கலாச்சாரம், இலக்கியம் இவற்றில் ஆர்வம் உடைய அனைவரையும் வரவேற்கிறோம்.

நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் வெளிநாட்டுச்சூழலில் வாழும் குழந்தைகளும், எளிதாக தமிழ்க் கற்கும் வகையில் பாட நூல்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் பல்லூடகம் (மல்டிமீடியா) முறையிலும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகத்துடன் இணைந்து, இங்கிலாந்தில் முதன்முறையாக நமது நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம் தமிழ்ப்பணி ஆற்றுவதில் பெருமை கொள்கிறோம்.

தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு இங்கிலாந்தின் தொடர்பு மையமாக நம் கல்விக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழில் மழலைக் கல்வி முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதுநிலை பட்டமும் பெறுவதற்கு நம் கல்விக்கழகத்தின் வாயிலாக உதவி புரிகிறோம்.