நோக்கம்:
நியூகாசில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாழும் தமிழ் ஆர்வம் உள்ள குழந்தைகள் தமிழ்த்திறன் பெற்று, தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொடுப்பதாகும்.
தமிழ்ச் சார்ந்த கலைகள், கலாச்சாரம், இலக்கியம் பற்றிய அறிவினை இன, மொழி, சமய வேறுபாடின்றி அனைத்து சமூகத்திடமும் வளர்ப்பதும் நம் கல்விக்கழகத்தின் நோக்கமாகும்.
குறிக்கோள்:
- குழந்தைகள், தமிழ்மொழியை கற்பதற்கு உதவுவது.
- தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அறிவை எளிய முறையில் கற்றுத் தருவது.
- தமிழ் கற்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வின் சமூகத்திறனை மேம்படுத்துவது.
சின்னம்:
நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகத்தின் சின்னம் உணர்த்தும் பொருள்.
நான்கு வளைகோடுகள் தமிழ்க்கலையின் அடையாளமான கோலத்தை அடிப்படையாக கொண்டது.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற தமிழ்ப் பழமொழியினை நினைவு படுத்துவது போல், நான்கு வளைகோடுகள் இணையும் பகுதிகள், இணைந்த கைகளைப் போல் அமைந்துள்ளது.
நான்கு ரோஜா நிற பகுதிகள், தாமரை மலரின் நான்கு இதழ்களைக் குறிப்பதாகும்.
தமிழ் மொழியினைப் பயிற்றுவிக்கும் இடம் என்பதனை குறிப்பதாக தமிழ்மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்து தாமரை மலரின் முதல் இதழில் அமைந்து உள்ளது. பிற இதழ்களில் தமிழ்க் கலை மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் பரதம், வீணை, யோகாசனம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தில் உள்ள விளக்கினைப் போல, நியூகாசில் தமிழ்க் கல்விக்கழகம், தமிழ்க் கல்வி, கலாச்சாரம், மற்றும் கலைகள் போன்றவற்றைப் பரப்பும் ஒளிவிளக்காக திகழும் என்பதனை உணர்த்துவது போல் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.